Hot Posts

6/recent/ticker-posts

உலக நன்மை வேண்டி நாமக்கல்லில் 2000 சித்தர்கள் பங்கேற்கும் சிறப்பு யாகம்; பொதுமக்களுக்கு அழைப்பு

நாமக்கல் மாவட்டம் வெப்படை வெள்ளி குட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ யோக சித்தர்கள் திருத்தலத்தில் வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் உலக சித்தர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் 2 ஆயிரம் சித்தர்கள், சாதுக்கள், சன்னியாசிகள், சிவனடியார்கள் ஆகியோர் கலந்துகொண்டு ஆசியாவிலேயே முதல்முறையாக சித்தர்கள் நடத்தும் மகா 3000 பச்சை இழை மூலிகை யாகங்கள் மற்றும் தமிழகத்தில் முதல் முறையாக ருத்ர அபிஷேகம் நடைபெறுகிறது. இது குறித்து ஈரோட்டில் ஸ்ரீ யோக சித்தர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியில் ஸ்ரீ யோக சித்தர் கூறுகையில், நடைபெறும் இந்த யாகம் உலக நன்மைக்காக மகா சித்தர்கள் நடத்தும் யாகம், மக்கள் கோரிக்கை வேண்டி நடைபெறும் பூஜை, நாதகிரி, சங்ககிரி, வேதகிரி, மங்களகிரி, நான்கு மலைகளுக்கு மத்தியில் எழுந்து அருள்பாலிக்கும் 18 சித்தர்கள் இருக்கும் தலம் ஸ்ரீ யோக சித்தர்கள் திருத்தலம் எனவே பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு அனைவரது வாழ்க்கையிலும் நன்மை பெற வேண்டும் என கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்