பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஷ்குமார் அவர்கள் ரூ.1.18 கோடி மதிப்பீட்டில் கூடுதல் புதிய துணை சுகாதார நிலையம் கட்டும் பணிக்கு
அடிக்கல் நாட்டினார் , முதலைப்பட்டியில் 15-வது மத்திய நிதி ஆணையம் மற்றும் தேசிய நலவாழ்வு இயக்கத்தின் கீழ், ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் துணை சுகாதார நிலையம் கட்டும் பணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள் (நாமக்கல்), திரு.கு.பொன்னுசாமி அவர்கள் (சேந்தமங்கலம்) ஆகியோர் முன்னிலையில் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர்மன்றத் தலைவர் திரு.து.கலாநிதி, துணைத்தலைவர் திரு.செ.பூபதி, இராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திரு.கே.பி.ஜெகநாதன், அட்மா குழுத் தலைவர் திரு.அ.அசோக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.எம்.சிவக்குமார், இணைபதிவாளர், கூட்டுறவு சங்கங்கள் திரு.க.பா.அருளரசு, துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.க.பூங்கொடி, நாமக்கல் நகராட்சி ஆணையாளர் திரு.சென்னுகிருஷ்ணன், பழங்குடியினர் நல திட்ட அலுவலர் திரு.பீட்டர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்