Hot Posts

6/recent/ticker-posts

களைகட்டிய நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்... கும்பாபிஷேகம் கோலாகலம்!

 

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் நாமக்கல் மாவட்டத்தில் மையப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில். இந்த கோவில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை 18 அடி உயரத்தில் ஒரே கல்லால் ஆனது. நினைத்த காரியம் நிறைவேறும் இந்த ஆஞ்சநேயருக்கு வடமாலை சாற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் ஸ்ரீராமஜெயம், ஸ்ரீஆஞ்சநேயா போற்றி என 108 முறை பிரார்த்தனை சீட்டு எழுதி நூலில் கட்டி சன்னதியின் பின்புறம் உள்ள ஜன்னலில் கட்டித் தொங்க விட்டால் தங்களின் கோரிக்கையை ஆஞ்சநேயர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் நிலவுகிறது. ஏராளமான பக்தர்கள் வருகை இத்தகைய உலக பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் தரிசனத்துக்கு வருகின்றனர். மகா கும்பாபிஷேகம் இக்கோவிலில் கடந்த 1996ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது. தொடர்ந்து 2009ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கோலாகலமாக மகா கும்பாபிஷேக விழா நடந்துள்ளது. சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேக பெருவிழா கோலாகலமாக நடை பெற்றது. ஆஞ்சநேயர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். கோவிலில் குவிந்த பக்தர்கள் கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்