நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் உமா கொடியசைத்து
துவக்கி வைத்தார் இந்தப் பேரணியானது நாமக்கல் அரசு தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி மோகனூர் சாலை மணி கூண்டு வழியாக திருச்சி சாலை ஸ்டேட் பாங்க் வழியாக தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வந்தடைந்தது இந்த பேரணியில் சமூக நல பாதுகாப்பு பணியாளர்கள் சுகாதாரத் துறை செவிலியர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு குழந்தைகளை பாதுகாப்போம்
வளமான தேசத்தை உருவாக்குவோம் பெண் குழந்தைகளை காப்போம் குழந்தை திருமணத்தை தடுப்போம் உள்ளிட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்தப் பேரணியில் சமூக நல பாதுகாப்பு அலகு அலுவலர்கள் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் ரெட் கிராஸ் சங்க அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்