நாளை கார்த்திகை தீப திருநாளாக கொண்டாடப்பட உள்ளது,இந்நிலையில் பொதுமக்கள் கோவில் மற்றும் இல்லங்களில் மண் விளக்குகளால், தீப விளக்கு வைத்து தெய்வங்களை வணங்க உள்ளனர்
இந்த நிலையில் கார்த்திகை தீபம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் மண் அகல்விளக்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
கார்த்திகை தீப நாளில் மண் விளக்கில், திப விளக்கு வைத்தால் உடலில் உள்ள நோய்கள் விலகும், வீடு சுபக்சமாக இருக்கும் என்றும் முன்னோர்கள் கூறியுள்ளனர், இந்நிலையில் மண்களால் செய்யப்பட்ட குத்துவிளக்கு,ஐந்து முகவிளக்கு,லட்சுமி, விநாயகர்,சரஸ்வதி விளக்கு மற்றும் சாதரண விளக்கு என பல வகையான மண் விளக்குகள் உள்ளது 2ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல் நகர் பகுதியில் கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் தனி ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளதல்,பொதுமக்கள் அவர்களின் வீடு மற்றும் ஆலயங்களில் தீபம் ஏற்றும் வகையில் விளக்குகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
0 கருத்துகள்