Hot Posts

6/recent/ticker-posts

ராசிபுரத்தில் பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ராசிபுரத்தில் பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்ற பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ராசிபுரம் ரோட்டரி சங்கம், ராசிபுரம் வித்யாநிகேதன் பள்ளியின் இன்ட்ராக்ட் கிளப், ராசிபுரம் நகராட்சி ஆகியன இணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வு பேரணி வித்யாநிகேதன் பள்ளி முன்பாக துவங்கியது. இதற்கான துவக்க விழாவில் ரோட்டரி சங்கத் தலைவர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் முனைவர் ஆர்.கவிதா சங்கர் கொடியசைத்துப் பேரணியை துவக்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ மாணவியர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள், தவிர்க்க வேண்டிய அவசியம் போன்றவை குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தம் வகையில் 250.க்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்றனர். இப்பேரணி பெரிய கடைவீதி, அண்ணாசாலை, கச்சேரித்தெரு, பழைய பஸ் நிலையம் வழியாக மீண்டும் பள்ளியை சென்றடைந்தது. இதில் பள்ளி முதல்வர் டி.சித்ரா, இன்ட்ராக்ட் கிளப் திட்டத் தலைவர் எஸ்.கதிரேசன், ரோட்டரி சங்கச் செயலர் வி.ஆர்.எஸ்.அனந்தகுமார், நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்