Hot Posts

6/recent/ticker-posts

குமாரபாளையத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சி விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ஆசார் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில். ஹோமியோபதி சித்தா மற்றும் நேச்சுரோபதி யோகா உள்ளிட்ட மருத்துவ கல்லூரிகள் செயல்படுகின்றன இந்த மருத்துவ கல்லூரிகளின் 2023 ஆம் ஆண்டுக்கான ஆண்டுவிழா கல்லூரியின் மாணவ மாணவிகள் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. நிகழ்ச்சியில் எக்ஸெல் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் நடேசன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இரண்டு நாட்கள் நிகழ்வாக நடைபெற்ற நிகழ்ச்சியில், இரண்டாவது நாளான இன்று சின்னத்திரை புகழ் ஆசார் மற்றும் சுட்டி அரவிந்த ஆகியோர் பங்கேற்றனர். மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர் பின்னர் மாணவர்கள் மத்தியில், சுவாரசியமான பல குரல்களில் பேசியும் நகைச்சுவை உள்ளிட்டவற்றை மாணவர்களிடையே செய்தனர். மேலும் புல்லாங்குழல் இசைத்தும் தங்களது தனித்திறமைகளை மாணவர்களிடையே வெளிப்படுத்தி அவர்களை உற்சாகப்படுத்தினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்