Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே காலில் காயங்களுடன் அரிய வகை ஆந்தை வனத்துறையினால் மீட்கப்பட்டது

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலை தனியார் திரையரங்கம் எதிரே ,மேம்பால பணிகள் நடைபெற்று வரும் பகுதி மேம்பாலத்தூண் அருகே ,சுமார் இரண்டு வயது மதிக்கத்தக்க அரிய வகை ஆந்தை ஒன்று காலில் காயங்களுடன் பறக்க முடியாத நிலையில் இருப்பதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ஆந்தையை பாதுகாப்பாக சாலை ஓரத்தில் கொண்டு சென்று குடிப்பதற்கு தண்ணீர் வழங்கினர். சிறிது தண்ணீர் குடித்த ஆந்தை பறப்பதற்கு முயற்சி செய்தது.. ஆனால் பறக்க முடியாமல் உட்கார்ந்து நிலையிலே இருந்ததால், இது குறித்து அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் நாமக்கல் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் அடிப்படையில் வனத்துறை அலுவலர் பிரபு காலில் காயங்களுடன் தவித்துக் கொண்டிருந்த ஆந்தையை அட்டை பெட்டிக்குள் வைத்து பத்திரமாக மீட்டுச் சென்றார்.
இது குறித்து வனத்துறை அலுவலர் பிரபு கூறும் பொழுது, ஆந்தைக்கு சுமார் இரண்டு வயதுக்குள் இருக்கலாம்! பறக்கும் பொழுது மற்ற பறவைகளால் தாக்கப்பட்டு அல்லது வேறு விதத்தில் காலில் காயம் ஏற்பட்டிருக்கலாம். அதற்குரிய முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன் பிறகு அடர்ந்த வனப் பகுதிக்கு ஆந்தை விடப்படும் என தெரிவித்தார்.. இதன் காரணமாக பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது....

கருத்துரையிடுக

0 கருத்துகள்