நாமக்கல் அருகே சிலுவம்பட்டியில் புதியதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சேவையை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 21 ம் தேதி துவக்கி வைத்தார்.
இதனையடுத்து நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகளை 108 ஆம்புலன்ஸ் மூலம் பணிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இடம் மாற்றம் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கான சிகிச்சை தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா நேரில் சென்று பார்வையிட்டார் மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கான வசதிகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
0 கருத்துகள்