Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வாடகை ஆட்டோ நிறுத்தி செல்லுதல் தொடர்பாக ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கடந்த 10/ 12 /2019 ஆம் தேதி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் எஸ் ஆர் ஜி நாமக்கல் 157 /2019 என்ற எண்ணில் பதிவு செய்து நாமக்கல் திருச்சி ரோடு பழைய கிரிமினல் கோர்ட்டின் முன்பு நிறுத்தி திருச்சி சாலை பகுதியான வேப்பனம் வரை பயணிகளை ஏற்றி இறக்கி வருகிறோம். எங்களின் சங்கத்தில் 25 உறுப்பினர்களை கொண்டு 17 ஆட்டோக்களை கொண்டு பொதுமக்களை சேவைகள் செய்து வருகிறோம். தற்போது எங்களுக்கு போதிய வருமான இல்லாததாலும் தற்போது அரசு மருத்துவமனையை நாமக்கல் மருத்துவ கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் எங்களின் ஆட்டோக்களின் நிறுத்தி பயன்களை ஏற்றி இறக்கிச் செல்ல அனுமதி வழங்கினால் நாங்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து முறையாகவும் பயணிகளை பாதுகாப்போம் ஓட்டுவோம் என்று அனுமதி வழங்க கோரி மாவட்ட ஆட்சியிடம் ஆட்டோ சங்கத்தினர் மனு கொடுத்தனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்