ராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளுக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த 15 லட்சம் மதிப்பிலான இரும்பு பைப்புகள் திருட்டு... 4 பேர் கைது ...
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த ஆயில்பட்டி அருகே இராசிபுரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்கு பதிப்பதற்க்கு அடிக்கி வைக்கப்பட்டிருந்து 47 இருப்பு பைப்புகளை திருடி கோவையில் விற்ற அரவிந்தன் (21) சந்துரு (23) பால்ராஜ் (25) அப்பு (28) கைதான 4 பேர் கைது.
சேலம் மாவட்டம் உடையாப்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்து கவுண்டர் என்பவரின் மகன் பாலசுப்பிரமணியன் (60).இவர் ராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளுக்கான ஒப்பந்தத்தை அரசிடம் இருந்து பெற்று செய்து வருகிறார்.
மெட்டாலா முதல் திம்மநாயக்கன்பட்டி வரை நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பதிப்பு பணிக்காக 1-12-23 அன்று ஆந்திராவில் இருந்து 319 பைப்புகளை ஏற்றி வந்து ஆயில்பட்டி அருகே உள்ள பூமாலை சேக்கோ பாக்டரி அருகே சாலையோரமாக இறக்கி வைத்துள்ளனர்.
இந்நிலையில் 5 - 12 - 23 அன்று பணியை துவங்குவதற்கு வந்தபோது அடுக்கி வைக்கப்பட்டிருந்த இரும்பு பைப்புகளில் ஐந்து வரிசைகள் காணாமல் போனது தெரியவந்தது...
எண்ணிக்கையில் 47 பைப்புகள் எனவும் இதன் மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என கூறப்படும் நிலையில் இந்த பைப்புகளை திருடி சென்ற மர்ம நபர்கள் மீது ஆயில்பட்டி காவல் நிலையத்தில் பாலசுப்பிரமணியன் புகார் அளித்தார்...
இது தொடர்ந்து பேளுக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் ஆயில்பட்டி சுரேஷ் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடினர்...
அப்போது இந்த பைப்புகளை லாரிகளில் ஏற்ற பயன்படுத்திய கிரேன் உரிமையாளர் மற்றும் ஓட்டுனர்களை பிடித்து விசாரித்ததில் இவர்கள் வாடகைக்கு தங்களை அழைத்து ஏற்ற சொன்னதாக கூறினர்...
தொடர்ந்து செல்போன் இணைப்புகளின் டவரை வைத்து குற்றவாளிகள் கடலூரில் இருப்பதை கண்டறிந்த தனிப்படை போலீசார் அவர்களை அதிரடியாக கைது செய்து கோவை பகுதியில் விற்கப்பட்ட 47 இரும்பு பைப்புகளை மீட்பதோடு கிரேன் மற்றும் லாரியை பறிமுதல் செய்த போலீசார் குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்...
0 கருத்துகள்