Hot Posts

6/recent/ticker-posts

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயில் ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயில் ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி நமது திருச்செங்கோடு நகரில் அதன்
அழைப்பிதழ்களை ஆஞ்சநேயர் கோயிலில் பூஜை செய்து நான்கு ரத வீதியாக கொண்டு சென்று ஆபத்து காத்த விநாயகர் கோயில் வைத்து மீண்டும் ஆஞ்சநேயர் கோவில் வந்து பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் அயோத்தி ராமஜென்ம பூமி தீர்த்த சேத்ர அறக்கட்டளை தென் தமிழக பொறுப்பாளர் மோகன், திருச்செங்கோடு பகுதி பொறுப்பாளர்கள் பூங்குழலி (எ)இறையரசி ரஜினிகாந்த், பாஜக மாவட்ட பொருளாளர் மகேஸ்வரன், நகர்மன்ற உறுப்பினர் தினேஷ்குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் சசிதேவி பழனிசாமி மற்றும் சுந்தர குருக்கள், கந்த சுப்பிரமணிய குருக்கள், செந்தில் குருக்கள், மகேஷ்குருக்கள், சாமிநாத குருக்கள், பாஸ்கர் பட்டாச்சாரியர், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்