Hot Posts

6/recent/ticker-posts

மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்களில் பெறப்பட்ட சுமார் 4,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காண நடவடிக்கை - பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் பேச்சு.

மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்களில் பெறப்பட்ட சுமார் 4,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காண நடவடிக்கை - பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் பேச்சு.

நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மோகனூர் பேரூராட்சி, முத்துராஜா தெரு, மாசடச்சியம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமினை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் பார்வையிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் 
பேசியதாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை எளிய மக்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். அதன்படி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 18.12.2023 அன்று கோயம்புத்தூர் மாவட்டம், ஆவாரம்பாளையத்தில், அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், திராவிட மாடல் ஆட்சியின் மற்றுமொரு மைல்கல்லாக “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.
அதன்தொடர்ச்சியாக, நாமக்கல் மாவட்டத்தில் 18.12.2023 முதல் 29.12.2023 இன்று வரை 10 நாட்களில் 13 அரசுத்துறை சார்ந்த அலுவலர்களை கொண்டு 39 முகாம்கள்  நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில், பல்வேறு சேவைகள் பெறும் வகையில்  பொதுமக்களால் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதன்படி, ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் விரைவில் பரிசீலினை செய்யப்பட்டு அரசின் விதிமுறைகளுக்குட்பட்ட தகுதியான நபர்களுக்கு  தேவையான அரசின் சேவைகள் உடனடியாக வழங்கப்படும். 

மேலும், கடந்த 18.12.2023 முதல் 29.12.2023 இன்று வரை நடைபெற்ற 39 முகாம்களில் பங்கேற்று, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று சிறப்பாக சேவைபுரிந்தமைக்கு மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, காவல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஆதிதிராவிடர் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மற்றும் தாட்கோ உள்ளிட்ட அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களின் குடிநீர் தேவையை அடிப்படை தேவையாக கருதி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி மோகனூர் பேரூராட்சிக்கு புதியதாக மல்லம்பாளையம் என்ற இடத்தில் 3 எண்ணிக்கையிலான நீர் உறிஞ்சு கிணறுகள் மற்றும் 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் பகிர்மான குழாய்கள் புதியதாக அமைத்து காவிரி கரையில் அமைந்துள்ள மோகனூர் பேரூராட்சி பகுதிகளுக்கு சீராக குடிநீர் விநியோகம் வழங்கும் வகையில் ரூ.22.77 கோடி மதிப்பீட்டில் பணிகள் விரைந்து தொடங்கப்பட்டு நடைபெறவுள்ளது என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார்.

 இம்முகாம்களில் அட்மா குழு தலைவர் திரு.நவலடி, உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்