பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள்
ரூ.52.36 இலட்சம் மதிப்பில் 4 புதிய அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், அரூர், ஆண்டாபுரம், இராசிபாளையம் மற்றும் சின்னபெத்தாம்பட்டி ஆகிய ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில், ரூ.52.36 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 4 புதிய அங்கன்வாடி மைய கட்டடங்களை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.
1.அங்கன்வாடி மையம் (அரூர் ஊராட்சி) :
நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், அரூர் ஊராட்சி 1408.95.5 ஹெக்டேர் பரப்பளவும், 1,505 குடியிருப்புகளும் கொண்டதாகும். இங்கு சுமார் 3,889 பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவ்வூராட்சியில் 5 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆலம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் மிகவும் பழுதடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் இருந்ததால் 2022-2023 ஆம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.13.57 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையக்கட்டடம் கட்டப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் உள்ளிட்டோர் பயன்பெறுவார்கள். அரூர் ஊராட்சியில் ரூ.13.57 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.
2.அங்கன்வாடி மையம் (ஆண்டாபுரம் ஊராட்சி) :
நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், ஆண்டாபுரம் ஊராட்சி, 489.18.50 ஹெக்டேர் பரப்பளவும், 565 குடியிருப்புகளும் கொண்டதாகும். இங்கு சுமார் 1,955 பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவ்வூராட்சியில் 1 அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆண்டாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் மிகவும் பழுதடைந்து பயன்படுத்தாத நிலையில் இருந்ததால் 2021-22ஆம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.12.61 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையக்கட்டடம் கட்டப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் பயன்பெறுவார்கள். ஆண்டாபுரம் ஊராட்சியில் ரூ.12.61 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.
3.அங்கன்வாடி மையம் (இராசிபாளையம் ஊராட்சி) :
நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், இராசிபாளையம் ஊராட்சி 806.72 ஹெக்டேர்பரப்பளவும்,1,658 குடியிருப்புகளும் கொண்டதாகும். இங்கு சுமார் 3,363 பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவ்வூராட்சியில் 3 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இராசிபாளையம் கிராமத்தில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் மிகவும்பழுதடைந்து பயன்படுத்தாத நிலையில் இருந்ததால் 2021-2022ஆம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.12.61 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையக்கட்டடம் கட்டப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் பயன்பெறுவார்கள். இராசிபாளையம் ஊராட்சியில் ரூ.12.61 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.
4.அங்கன்வாடி மையம் (சின்னபெத்தாம்பட்டி ஊராட்சி) :
நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், சின்ன பெத்தாம்பட்டிஊராட்சி 328.57.0 ஹெக்டேர் பரப்பளவும், 304 குடியிருப்புகளும் கொண்டதாகும். இங்கு சுமார் 1,567 பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவ்வூராட்சியில் 2 அங்கன்வாடி மையங்கள் செயல்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் சின்னபெத்தாம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் மிகவும் பழுதடைந்து பயன்படுத்தாத நிலையில் இருந்ததால் 2022-23ஆம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.57 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையக்கட்டடம் கட்டப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் பயன்பெறுவார்கள். சின்னபெத்தாம்பட்டி ஊராட்சியில் ரூ.13.57 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.
மேற்கண்ட புதிய அங்கன்வாடி மையங்களில் புதிய வகுப்பறைகள், சமையலறை, கழிப்பிடவசதி மற்றும் குடிநீர்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.எம்.சிவக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திரு.குமார், அட்மா குழுத்தலைவர் திரு.நவலடி உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்
0 கருத்துகள்