சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் நிவாரணப் பொருட்களை நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பி வைப்பு.
தமிழகத்திலேயே நாமக்கல் மாவட்டம் தான் முதல் முறையாக நிவாரணப் பொருட்களை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளதாக அமைச்சர் மதிவேந்தன் பேட்டி.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மக்ஜாம் புயல் காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள அரிசி, ரவை, கோதுமை உள்ளிட்ட 16 வகையாக பொருட்களை தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இந்நிகழ்வில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண பொருட்கள் அடங்கிய வாகனத்தை சென்னைக்கு கொடி அசைத்து அனுப்பி வைத்தனர்.
இதன் பின் வனத்துறை அமைச்சர் டாக்டர்.மதிவேந்தன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று இரவு முதல் இதுவரை 6 லாரிகளில் 82 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்னும் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல சங்கங்களை சார்ந்தவர்கள், தொழில் அதிபர்கள், தன்னார்வலர்கள் தானாக முன் வந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர்.
தமிழக முதல்வரின் உத்தரவின் பெயரில் சென்னைசென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதிகளுக்கு நான் சென்று மக்களுக்கு தேவையானவையை பூர்த்தி செய்ய உள்ளோம்.
தமிழகத்திலேயே நாமக்கல் மாவட்டம் தான் முதல் முறையாக நிவாரணப் பொருட்களை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றார்.
0 கருத்துகள்