பள்ளிபாளையம் டிசம்பர் 13
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆவரங்காடு நகரக் கிளைகள் சார்பாக, நகரக் கிளை செயலாளர்கள் பெருமாள்,தர்மன் மற்றும் கட்சி நிர்வாகி சரவணன் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லட்சுமணன் ஆகியோர், பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் மோ.செல்வராஜ் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு ஒன்று வழங்கினர் .
அந்த மனுவில் அனைத்து வார்டுகளிலும், வாரம் இரண்டு முறை சாக்கடையில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்! குடிநீர் குழாய் அமைக்க தோண்டிய சாலைகள் பழுதடைந்து இருப்பதால், காலை மாலை நேரத்தில் அவ்வழியே செல்லும் பள்ளி மாணவ ,மாணவியர், சிறுவர், சிறுமியர், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சாலைகளை விரைவாக சீர்படுத்தி தர வேண்டும்!
நகரப் பகுதியில் தெரு நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும்!
ஆவரங்காடு சனி சந்தை மைதானத்தை இளைஞர்கள் சிறுவர்கள், கபடி ,கிரிக்கெட், உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பயன்படுத்தி வருகிறார்கள்... அதை முறையாக பராமரிப்பு செய்து மைதானத்தை நிரந்தர விளையாட்டு மைதானமாக ஒதுக்கி தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கப்பட்டது ..
மனுவை பெற்றுக் கொண்ட நகர மன்ற தலைவர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.....
0 கருத்துகள்