பள்ளிபாளையம் டிசம்பர் 13
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் காவிரி ஆறு ஓடுகிறது. இந்நிலையில் தொடர்ந்து காவிரி ஆற்றில் குப்பை கழிவுகள் மற்றும் பூஜை பொருட்களை வீசி காவிரி ஆற்றை பொதுமக்களில் ஒரு சிலர் மாசுபடுத்தி, வருவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தது .
இதனை அடுத்து பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ்,
நகர் மன்ற துணைத் தலைவர் ப.பாலமுருகன் மற்றும் நகராட்சி ஆணையாளர் தாமரை அவர்கள் அறுவுறுத்தலின்படி பள்ளிபாளையம் புதுப்பாலம் பகுதியில் அறிவிப்பு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் காவிரி ஆற்றில் கழிவு பொருட்களை ,உணவு கழிவுகளை ,பூஜை பொருட்களை, பூக்களை எதுவும் கொட்டக்கூடாது! அவ்வாறு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைகளை மீறி செயல்படும் நபர்கள் கண்டறியப்பட்டால் 5000 ரூபாய் அபராத வசூலிக்கப்படும்! மேலும் கண்காணிப்பு கேமரா மூலமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது .....
0 கருத்துகள்