பரமத்தி வேலூா் அருகே உள்ள குப்பிச்சிபாளையம் உயா்நிலைப் பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பிறகு நல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்தா பிரிவில் உள்ள மருந்தகம், மருத்துவா் அறை, நீராவிக் குளியல் மருத்துவ அறை, தைல மருத்துவ அறை, அறுவை அரங்குடன் கூடிய 30 படுக்கைகள் பிரிவில் ஸ்கேன் பிரிவு, அறுவை அரங்கம், பிரசவத்திற்கு பின் கவனிப்பு அறை, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, பிரசவ அறை, ஆய்வகம், பல் மருத்துவ பிரிவு உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை உள்பட பல்வேறு விவரங்களை மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் நல்லூா் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டடப் பணிகளையும் பாா்வையிட்டாா்.
ஆய்வின் போது, மாவட்டக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன், பரமத்தி வேலூா் வட்டாட்சியா் கலைச்செல்வி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அசோகன், நடராஜன், வட்டார மருத்துவ அலுவலா் மேகலா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.
0 கருத்துகள்