பிலிக்கல்பாளையம் விவசாயிகள் வெல்லம் சா்க்கரை விற்பனை ஏலச் சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெல்லம் விலை சரிவடைந்ததால் வெல்ல உற்பத்தியாளா்கள் கவலை அடைந்துள்ளனா்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 4, 100 உருண்டை வெல்ல சிப்பங்களும், 2 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ரூ. 1, 340 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ரூ. 1, 340 வரையிலும் ஏலம் போனது.
சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 4, 100 உருண்டை வெல்ல சிப்பங்களும், 2 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ரூ. 1, 270 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ரூ. 1, 270 வரையிலும் ஏலம் போனது. டன் ஒன்று ரூ. 2, 500 வரை விற்பனையான கரும்பு, தற்போது டன் ரூ. 3 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.
0 கருத்துகள்