இராசிபுரம்;டிச,21_
மங்களபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர் மீது பொதுமக்கள் சிகிச்சை அளிக்க மறுத்ததாக புகார் எழுந்துள்ளது..
இராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் ஊராட்சியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.மங்களபுரத்தை சுற்றியுள்ள உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த மருத்துவமனையை நம்பியே உள்ளனர்.இருந்த போதும் இந்த மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதும் மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைத்து நோயாளிகளை வர வைப்பதாக பலமுறை குற்றச்சாட்டு எழுந்துள்ளது...
தொடர்ந்து நேற்று (செவ்வாய்)மதியம் 2.30 மணி அளவில் மங்களபுரம் கிராம பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனது மனைவியை அழைத்து கொண்டு மங்களபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.அவரின் மனைவிக்கு காய்ச்சல் உள்ளது என்று சிகிச்சை செய்ய கூறியுள்ளார்.அதற்கு அங்கு பணியில் இருந்த மருத்துவர் எழில் ஊசி எதுவும் போடாமல் மாத்திரை மட்டும் கொடுத்து உள்ளார். ஏன் ஊசி போடவில்லை என்று கேட்டதற்கு மாத்திரை மட்டும் போதும் என மருத்துவர் எழில் கூறியுள்ளார்.அதன் பிறகு அங்கிருந்து வந்து தனியார் கிளினிக்கில் அவரின் மனைவிக்கு ஊசி போட்டு சென்றுள்ளார்..
இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் மாரிமுத்து கூறியதாவது..
தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க வசதி இல்லாத காரணத்தால் அரசு மருத்துவமனையை சிகிச்சைக்காக வருகிறோம் ஆனால் இங்கிருக்கும் மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைத்து நடத்துவதால் உரிய சிகிச்சை அளிக்க மறுக்கின்றனர். எனவே அரசு தலையிட்டு இப்ப பிரச்சினையை தீர்த்து பொது மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறினார்.
இந்த சம்பவம் குறித்து மங்களபுரம் அரசு மருத்துவமனையில் இன்று பணியில் உள்ள பாலாஜி மருத்துவரிடம் கேட்ட போது :
நான் நேற்று விடுமுறை நான் பணிகள் இல்லை எனக்கு தெரியாது. பணியில் இருந்த மருத்துவரிடம் கேட்டால் தான் தெரியும் என்று கூறிவிட்டார்.
0 கருத்துகள்