Hot Posts

6/recent/ticker-posts

மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் பிரதம மந்திரி நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பிரதமமந்திரி நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு;
மல்லசமுத்திரம், டிச. 31–
மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் பிரதம மந்திரி நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட மேல்முகம், மேட்டுபாளையம், சப்பையாபுரம், சர்கார் மாமுண்டி உள்ளிட்ட பகுதியிகளில், பாரத் சங்கல்ப் யாத்ரா வண்டியின் மூலம் பா.ஜ.க.,வினர் மக்களை சந்தித்து, பிரதமமந்திரியின் நலத்திட்டங்களான விவசாயிகளுக்கு சுயஉதவி, இலவச எரிவாயு, உருளை திட்டங்கள், விவசாய நலதிட்ட மானியம், விஸ்வகர்மா கடன்திட்டம், விவசாயிகளுக்கு புதியமுறையில் உரம் தெளிப்பதற்கான செயல்பாடுமுறை உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வி, வளர்ச்சியடைந்த பாரதம் சங்கல்ப யாத்ரா நிகழ்சி பொறுப்பாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்