Hot Posts

6/recent/ticker-posts

சீதோசன நிலை மாறுபாட்டால் வெங்காய வியாபாரிகள் கவலை

சீதோசன நிலை மாறுபாட்டால் வெங்காய வியாபாரிகள் கவலை 



பள்ளிபாளையம் டிசம்பர் 30 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக குளிர்ச்சியான சீதோசன நிலை காணப்படுகிறது. கடந்த வாரத்தில் தென் மாவட்டங்களில் அதிகளவு கன மழை பெய்த பொழுதிலும், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிகக் குறைந்த அளவிலான சாரல் மழையே பெய்தது... இருந்த போதிலும் சீதோசன நிலை மாறுபாடு ஏற்பட்டு தொடர்ந்து பகல் நேரத்தில் கூட வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.. மாலை நேரத்தில் குளிர்ச்சியான காற்று வீசி வருகிறது இந்நிலையில் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வெங்காய வியாபாரிகள் சீதோசன நிலை மாறுபாட்டால் கலக்கமடைந்துள்ளனர் ..
இது குறித்து அவர்கள் கூறியதாவது ..
  நாங்கள் வியாபாரத்திற்காக அதிக அளவு வெங்காயங்களை வாங்கி ஸ்டாக் வைத்துள்ளோம் .வெங்காயங்கள் மிதமான வெப்ப பகுதியில் இருந்தால் வெங்காயங்களை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.இல்லையேல் அவை விரைவில் அழுகி வீணாகிவிடும் ..

தற்போது குளிர்ந்த காற்றுடன் சீதோசன நிலை மாறு ஏற்பட்டுள்ளதால், விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள வெங்காயங்கள் ஈரப்பதம் அடைவதால் அவை எளிதில் அழுகும் நிலை உள்ளது.. எனவே எப்படியாவது முதலீட்டுத் தொகையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மிகக் குறைந்த விலைக்கு வெங்காயத்தை விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார் ....ஒரு சில கடைகளில் சிறிய வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் கிலோ 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்....

கருத்துரையிடுக

0 கருத்துகள்