பள்ளிபாளையம் டிசம்பர் 20
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சங்ககிரி சாலையில், நகராட்சி அலுவலகம் அருகே, தன்னம்பிக்கை நாயகன் அஜித் அசோசியன் சார்பில் புதிதாகப் பிறக்கும் 2024 ஆம் ஆண்டு சிறப்பானதாக இருக்க வேண்டும் என வாழ்த்தி, பொதுமக்களுக்கு இலவசமாக காலண்டர் வழங்கும் நிகழ்வானது நடைபெற்றது. நிகழ்விற்கு தன்னம்பிக்கை நாயகன் அஜித் அசோசியன் சங்க செயலாளர் ஆர்.தனசேகர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கே.சதீஷ்குமார் முன்னிலை வகித்தார் மேலும் மாவட்ட பொருளாளர் சி.கார்த்தி துணைத்தலைவர் எஸ்.மணிகண்டன் துணைச் செயலாளர் ஆர்.சதீஷ் இளைஞர் அணி தலைவர் எஸ்.அருண்குமார் முன்னிலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தினசரி நாட்காட்டி காலண்டர் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்வில் பலர் பங்கேற்றனர் ....
0 கருத்துகள்