பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய நகராட்சி ஊழியர்கள்
பள்ளிபாளையம் டிசம்பர் 28
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி சார்பில், வருகிற வெள்ளிக்கிழமை அன்று பள்ளிபாளையம் ஆவரங்காடு நகராட்சி சமுதாய கூடத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற உள்ளது.
இதில் மின் இணைப்பு பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளிகளுக்கான அட்டை பெறுதல், பட்டா மாறுதல், குடியிருப்புச் சான்றிதழ், சாதி சான்றிதழ் ,,உள்ளிட்ட பல்வேறு வகையான சேவைகளுக்கான முகாமில், அனைத்து தரப்பு பொதுமக்களும் பங்கேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ,பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட 20-வது வார்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நகராட்சி பணியாளர்கள் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
13 துறைகளை சேர்ந்த சேவைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட உள்ளது ...
0 கருத்துகள்