பள்ளிபாளையம் டிசம்பர் 6
கடந்த நவம்பர் 7-ஆம் தேதி,பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, பள்ளிபாளையம் பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் மேம்பால பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்திலும் அதிகளவு மழை நீர் தேங்கியது .
மழை நின்ற பிறகு வெள்ளநீர் பல்வேறு இடங்களில் வடிந்த நிலையில், பள்ளிபாளையம் சங்ககிரி சாலையில் பாரத ஸ்டேட் வங்கி முன்பாக, மேம்பால பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், மழை நீர் முழுமையாக வெளியேற்றாததால் தொடர்ந்து நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் ,இது குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கும் நீரை வெளியேற்றி, நோய் தொற்று ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது......
0 கருத்துகள்