நாமக்கல்லில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
நாமக்கல் சேலம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த இரு தினங்களுக்கு முன் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அப்பெண்ணிற்கு நேற்று காலை (16.12.23) குழந்தை பிறந்ததாகவும், குழந்தை பிறந்தவுடன் அந்த தாய்மாருக்கு காய்ச்சல் இருந்ததால் சில பரிசோதனைகள் மேற்கொண்டதாக தெரிகிறது.
இதை தொடர்ந்து அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது மருத்துவர்களால் உறுதி படுத்தப்பட்டது.
பின்னர் பிறந்த குழந்தை அதே மருத்துவமனையில் வைத்து உறவினர்களால் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் பெண்ணை மட்டும் நாமக்கல் அருகே சிலுவம்பட்டியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அப்பெண்ணை கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு அரசு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. நாமக்கல்லில் பச்சிளம் குழந்தையை பெற்ற தாய் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.,
0 கருத்துகள்