திருச்செங்கோட்டில் 50 ஆண்டுகளுக்கு மேலாக திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்திற்கு சொந்தமான நாலே முக்கால் ஏக்கா் நிலம் கைலாசம்பாளையத்தில் உள்ளது. அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தை திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தினா் வாங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக உயா் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்திற்கு நிலம் சொந்தமானது என்று தீா்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அப்பகுதி மக்கள் தங்கள் கோயிலுக்கு சொந்தமானது எனத் தெரிவித்து வரும் நிலையில் உயா் நீதிமன்றம் உத்தரவிட்டும் திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்திற்கு உரிமையான நிலத்தை மீட்க காவல் துறையினா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழக விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளா் சுந்தரம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
0 கருத்துகள்