Hot Posts

6/recent/ticker-posts

வைகுண்ட ஏகாதசி பெருவிழாயொட்டி பக்தர்களுக்கு வழங்க லட்டுகள் தயாரிப்பு பணி தீவிரம்

வைகுண்ட ஏகாதசி பெருவிழாயொட்டி பக்தர்களுக்கு வழங்க லட்டுகள் தயாரிப்பு பணி தீவிரம்

பள்ளிபாளையம் டிசம்பர் 21

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ராஜவீதி காவிரி கரையோரம் ஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருகிற சனிக்கிழமை அன்று 28-ஆம் ஆண்டாக வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிகழ்வு நடைபெற உள்ளது. முதல் நிகழ்வாக
சனிக்கிழமை அன்று காலை 4:00 மணிக்கு சுப்ரபாதத்துடன் துவங்கும் நிகழ்வானது 5.40 மணிக்கு பரமபத வாசல் திறப்பு விழா மற்றும் சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் வைகுண்ட ஏகாதசி விசேஷ பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 20,000 லட்டுக்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது .
ஆதி கேசவ பெருமாள் கோவில் அருகே உள்ள கோவில் மண்டபத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பெருமாள் கோவில் பக்தர்கள் லட்டுகள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வைகுண்ட ஏகாதசி தினத்தன்று காலை தொடங்கி மாலை வரை கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்க உள்ளதாகவும், விழா நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் ஆதிகேசவ கோவில் விழா கமிட்டியார் தெரிவித்துள்ளனர்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்