வருகின்ற ஜனவரி மாதம் தை திருநாளை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் தற்போது இருந்தே பல்வேறு பகுதியில் இருந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி நடத்த வேண்டும் என அப்பகுதியில் சேர்ந்த இளைஞர்கள் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கடந்த ஆண்டு பொட்டிரெட்டிப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்த நிலையில் ஆனால் இறுதி கட்டத்தில் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. எனவே இந்த வருடம் கட்டாயம் பொட்டிரெட்டிப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.
0 கருத்துகள்