பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்தி பாளையத்தில் தெருமுனை பரப்புரை கூட்டம் நடைபெற்றது
பள்ளிபாளையம் டிசம்பர் 16
திராவிடர் விடுதலைக் கழகம் அமைப்பின் சார்பில், வைக்கம் நூற்றாண்டு விழாவை ஒட்டி, எது சனாதானம்!? எது திராவிடம்? தெருமுனை பரப்புரை கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இந்த பரப்புரை பயணம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், குமாரபாளையம், திருச்செங்கோடு, ராசிபுரம் ,நாமக்கல், நகரத்தை ஒருங்கிணைத்து நடைபெற்ற தெருமுனை பரப்புரை கூட்டம்,, பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்தி பாளையத்தில் நிறைவு கூட்டமாக நடைபெற்றது.. இந்த நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகம் அமைப்பை சேர்ந்தவர்கள் சனாதானம் குறித்தும், திராவிடம் குறித்தும், பரப்புரைகளை மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் நாமக்கல் மாவட்ட திராவிட விடுதலைக் கழக அமைப்பாளர் அ.முத்துப்பாண்டி, மாவட்ட செயலாளர் மு.சரவணன், மற்றும் சமூக நீதி கூட்டமைப்பினர் என ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்......
0 கருத்துகள்