இராசிபுரம்
சிங்கிலியன் கோம்பை கிராம மக்கள்அனுபவ நிலத்திற்கு பட்டா வேண்டி மாவட்ட ஆட்சியர் முகாமில் மனு அளித்தனர்.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட திம்மநாயக்கன் பட்டியை அடுத்து மத்துரூட்டு பஞ்சாயத்து உள்ளது. இந்த பகுதியில் உள்ள சிங்கிலியன் கோம்பை கிராமத்தில் அனுபவ நிலத்திற்கு கடந்த 6 மாதத்திற்கும் முன்பாக தமிழக அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டது. பிறகு அரசு வழங்கிய பட்டா அரசால் நிறுத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தங்களுடைய அனுபவ நிலத்திற்கு பட்டா வழங்கிட வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை அடுத்து இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட தொப்பப்பட்டி கிராமத்தில் கடந்த புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் குறைதீர் முகாம் நடைபெற்றது. எனவே அந்த குறைதீர் முகாமில் திமுக ஒன்றிய கழக செயலாளர் கே.பி.ராமசாமி தலைமையில் சிங்கிலியன் கோம்பை கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.மேலும் இதில் எஸ்.ஏ.பாண்டியன்,செம்மலை,ராஜா செல்வம், பிரபாகரன், குமாரசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்