Hot Posts

6/recent/ticker-posts

மின்சாரத்துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசை கண்டித்து தெருமுனை கூட்டம் நடத்த சமூக நீதிக் கூட்டமைப்பினர் தீர்மானம்

மின்சாரத்துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசை கண்டித்து தெருமுனை கூட்டம் நடத்த சமூக நீதிக் கூட்டமைப்பினர் தீர்மானம்


 பள்ளிபாளையம் டிசம்பர் 30 



நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பெரியார் நகர் பகுதியில், சமூக நீதிக் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறுபான்மையினர் நல மாவட்ட செயலாளர் அசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சி, லோக் ஜனசக்தி கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக ,திராவிட கழகம் ,இடதுசாரி சிந்தனையாளர் நடுவம் ,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (ரெஸ்டார்) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 கூட்டத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் மூலம் மின்சாரத் துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்!

 தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய வெள்ள நிவாரண நிதியை தாமதம் இன்றி உடனடியாக முழுமையாக வழங்கிட வேண்டும்!

 தமிழ்நாட்டில் பெய்த தொடர் மழையை பேரிடராக உடனடியாக அறிவித்திட வேண்டும் !

மாநில சுயாட்சியை பறிக்கும் செயலில் ஈடுபடக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 7.1.2024 ஜனவரி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ஆவரங்காடு பகுதியில் கண்டன தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..சமூக நீதிக் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்