பள்ளிபாளையம் டிசம்பர் 17
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது... இந்நிலையில் பள்ளிபாளையம் நான்கு ரோடு சாலை உள்ளிட்ட இடங்களில், தற்போது அதிக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதால், போக்குவரத்து சிரமங்களை குறைக்கும் வகையில், மாற்று வழியில் வாகனங்களை செல்வதற்கு ஏதுவாக நெடுஞ்சாலை துறையினர் சாலைகளை சீர்படுத்தி வருகின்றனர்... இந்நிலையில் பள்ளிபாளையம் ராஜவீதி என்ற பகுதி வழியாக குமாரபாளையம் செல்லும் வழியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை உள்ளது .இங்கு தார் சாலை அமைக்கும் பணியினை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டனர்.. அப்பொழுது அங்குள்ள ஊர் பொதுமக்கள் தங்கள் பகுதியில் மழை பெய்யும் பொழுது மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.. எனவே போர்க்கால அடிப்படையில் கழிவு நீர் மற்றும் மழைநீர் செல்லும் வகையில் தார் சாலைக்கு நடுவில் குழாய் அமைத்து கழிவு நீர் மற்றும் மழைநீர் வெளியேவதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கேட்டு இருக்கிறோம். அதை நெடுஞ்சாலைத் துறையினர் செய்து கொடுக்காமல், இப்படி அவசரக் கதியில் தார் ரோடு போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி தார் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.. இதனை அடுத்து அந்தப் பகுதியில் தார் சாலை அமைப்பதை கைவிட்டு, முதல் கட்டமாக பொதுமக்களின் கோரிக்கை ஏற்று கழிவுநீர் மழை நீர் வெளியேறும் வகையில் குழாய் அமைப்பதற்கான பணிகளை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.......
0 கருத்துகள்