Hot Posts

6/recent/ticker-posts

Indian Navy Day 2023 DEC-4 : இந்திய கடற்படை தின கொண்டாட்டத்தின் வரலாறு என்ன என்று தெரிந்துகொள்வோமா?

ஒவ்வொரு ஆண்டும் இந்திய கடற்படை தினம் டிசம்பர் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய கடற்படையின் சாதனைகள் மற்றும் பங்கை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. 1971ம் ஆண்டு இந்திய – பாகிஸ்தான் போரின்போது நடந்த ஆபரேசன் டிரைடென்ட் என்பதை நினைவு கூறும் வகையிலும் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. போரின்போது இந்திய கடற்படை முக்கிய பங்கு வகித்தது. அந்த தாக்குதலை நினைவுகூறுவதற்காகவும், இந்த போரில் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்திய கடற்படை தினம் கடைபிடிக்கப்படுகிறது. முப்பரிமாண படையாக இந்திய கடற்படை உள்ளது. நாட்டை பாதுகாக்க கடலில், கடலின் மேல், கடலின் உள்ளே என மூன்று இடத்தில் இருந்தும் இயங்கி நமது நாட்டை பாதுகாக்கிறது. இந்திய கடற்பகுதிகளில் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவது இதன் நோக்கமாகிறது. இந்த நாளில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் இதன் கருப்பொருளும் மாறும். இந்திய கடற்படை தின வரலாறு – ஏன் கொண்டாடப்படுகிறது? இந்திய கடற்படை 1612ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியால் துவங்கப்பட்டது. 1971ம் ஆண்டு இந்திய – பாகிஸ்தான் போரில், இந்திய விமான படை மீது டிசம்பர் 3ம் தேதி ஒரு தாக்குதலை நடத்தியது. அவர்களின் அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய கடற்படை, டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஒரு தாக்குதலை நடத்த திட்டமிட்டது. பாகிஸ்தானிடம் வெடிகுண்டுகளை சுமந்துசெல்ல ஒரு விமானம் இல்லை. இந்திய கடற்படை, பாகிஸ்தானிக் கடற்படை தலைமையகமான கராச்சி மீது ஆபரேஷன் டிரைடென்ட் என்ற பெயரில் இலக்கு நிர்ணயித்தது. அது மூன்று மிசைல் கப்பல்களை ஏவியது. ஐஎன்எஸ் வீர், ஐஎன்எஸ் நிர்காட் மற்றும் ஐஎன்எஸ் நிப்பாட் மற்றும் வித்யூத் கிளாஸ் படகு ஆகியவற்றை கராச்சி மீது ஏவியது. அது 3 பாகிஸ்தான் கடற்படை கப்பல்களை மூழ்கடித்தது. அதில் பிஎன்எஸ் கைபாரும் ஒன்று. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய கடற்படையினர் கொல்லப்பட்டனர். இந்திய கடற்படையின் இந்த மொத்த ஆபரேஷனுக்கும் கமாண்டர் காசர்காட் பட்டானாஷெட்டி ராவ் தலைமை வகித்தார்.இந்திய கடற்படையின் இந்த வெற்றியை கொண்டாட இந்திய கடற்படை தினம் கடைபிடிக்கப்படுகிறது. நாடு முழுவதும் இது கொண்டாடப்படுகிறது. இந்த நாளின்போது மக்கள் இனிய கடற்படைதின வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் தெரிவித்துக்கொள்வார்கள். இந்திய கடற்படைக்கு மரியாதை செலுத்தும் வகையிலம், போரில் அவர்கள் அனுபவித்த துன்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. கடற்படைய எதற்கும் தயாராயிருத்தல், திட்டங்களை முடித்தல், திறன்மிகுந்த செயல்பாடு ஆகியவை இந்தாண்டு கடற்படை தின கருப்பொருள். இந்திய கடற்படை தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் இனிய இந்திய கடற்படை தின வாழ்த்துக்களை கூறி மகிழ்கிறது ஹெச்.டி தமிழ். சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

கருத்துரையிடுக

0 கருத்துகள்