நாமக்கல் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் நியமனத் தேர்விற்கு 1,298 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
*****
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (23.01.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் நியமனத் தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், வருகின்ற 04.02.2024 அன்று பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் நியமனத் தேர்வு நாமக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி (தெற்கு), நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி (வடக்கு), ஜெய்விகாஷ் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 4 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 1,298 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளார்கள்.
காவல்துறையினர் தேர்வு நடைபெறும் நாள் அன்று கட்டுக்காப்பு மைத்தில் இருந்து வினாத்தாள்கள் பெறப்பட்டு, தேர்வு முடிவுற்ற பின்னர் OMR விடைத்தாள் கட்டுகளை பாதுகாப்பான முறையில் அஞ்சல் துறையிடம் ஒப்படைக்கும் வரை 24 மணி நேரமும் 13 - ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களை நியமனம் செய்திட வேண்டும்.
மின்வாரியத் துறையினர் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கிட வேண்டும். மேலும், நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வினாத்தாள் கட்டுக்காப்பு மைத்திற்கு வினாத்தாள் கட்டுகள் பெறப்படும் நாளில் இருந்து விடைத்தாள் கட்டுகள் (OMR SHEET BUNDLES) அஞ்சலக அலுவலர்கள் வசம் ஒப்படைக்கும் நாள் வரை தடையில்லா மின்சாரம் வழங்கிட வேண்டும்.
போக்குவரத்துத் துறையினர் தேர்வு நாட்களில் தேர்வு நேரமான முற்பகல் 08.30 மணிக்கு முன்பாக தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு சென்றடையும் வகையில் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்திட வேண்டும்.
தீயணைப்புத்துறையினர் தேர்வுக்கான வினாத்தாள் கட்டுகள் பெறப்பட்டவுள்ள நிலையில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தை ஆய்வு செய்து தேவையான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
முதன்மைக் கல்வி அலுவலர்கள் வினாத்தாள் கட்டுக்காப்பு மைய பாதுகாப்பை உறுதி செய்து, தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகளை நேரடியாக பார்வையிட்டு தேர்வு மையங்கள் தேர்வு நடத்துவதற்கு தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்திட வேண்டும்.
மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) நான்கு தேர்வு மையங்களுக்கும் தேவையான அளவில் சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்து பயிற்சி வழங்கிட வேண்டும். போதுமான அளவில் அறைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் பரிசோதனை செய்ய உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர் / NSS / NCC ஆசிரியர்களை நியமனம் செய்திட வேண்டும்.
வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் இரட்டை பூட்டு கொண்டஅலமாரியை தயார் செய்தல், மந்தனத்தாட்கள் பெறப்படுவது முதல் சிசிடிவி கேமரா (பதிவு செய்யும் வசதியுடன் கூடியது) வசதி ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.
தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்வர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிவறை வசதி ஆகியவற்றை ஏற்படுத்திட வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு தேர்விற்கான அனைத்து வசதிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
அஞ்சல் துறையினர் தேர்வு முடிவுற்ற உடன் நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலக வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் இருந்து OMR விடைத்தாள் கட்டுகளை பெற்று பாதுகாப்பான முறையில் ஆசிரியர் தேர்வு வாரிய வழிகாட்டுதலின் படி ஒப்படைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் துறை அலுவலர்களை அறிவுறுத்தி உள்ளார்கள்.
மேலும், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தேர்வர்கள் தங்களது அனுமதிச்சீட்டினை 22.12.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்றிடவும் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ப.மகேஸ்வரி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்