Hot Posts

6/recent/ticker-posts

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக நாமக்கல் மாவட்டத்தில் ரூ.18.01 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 
காணொளி காட்சி வாயிலாக நாமக்கல் மாவட்டத்தில் ரூ.18.01 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (05.01.2024) காணொளி காட்சி வாயிலாக நாமக்கல் மாவட்டத்தில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம், தினசரி சந்தை, நகர்புற சுகாதார நல மையம் மற்றும் பூங்கா என மொத்தம் ரூ.18.01 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 புதிய கட்டடங்களை திறந்து வைத்தார். 

நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நாமக்கல் நகராட்சியில் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம், ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் தினசரி சந்தை மற்றும் மோகனூரில் ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம், இராசிபுரத்தில் ரூ.2.43 கோடி மதிப்பீட்டில் தினசரி சந்தை, பட்டணம் பேரூராட்சியில் ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம், குமாரபாளையத்தில் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம், பள்ளிபாளையத்தில் ரூ.75.00 இலட்சம் மதிப்பீட்டில் நகர்புற சுகாதார நல மையம், திருச்செங்கோட்டில் ரூ.1.89 கோடி மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் மற்றும் ரூ.35.00 இலட்சம் மதிப்பீட்டில் பூங்கா என மொத்தம் ரூ.18.01 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 
9 புதிய கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகராட்சி,  பட்டணம் பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர்.மா.மதிவேந்தன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் இராசிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் திரு.கே.பி.ஜெகநாதன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு.என்.ஆர்.சங்கர், இராசிபுரம் நகராட்சி ஆணையர் திரு.இரா.சேகர், நகராட்சி துணைத்தலைவர் திருமதி கோமதி ஆனந்த், பட்டணம் பேரூராட்சி தலைவர் திருமதி ஆர்.போதம்மாள், துணைத்தலைவர் திரு.பொன் நல்லதம்பி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்