Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்டம் ” 2-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழா” 2-ஆம் நாள் நிகழ்ச்சியில் சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள் ”புத்தகம் என்ன செய்யும் ?” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.

நாமக்கல் மாவட்டம் ” 2-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழா” 
2-ஆம் நாள் நிகழ்ச்சியில் சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள் ”புத்தகம் என்ன செய்யும் ?” 
என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் சாலை, நாமக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு) இன்று (27.01.2024) 2-ஆம் நாள் புத்தக திருவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டார். 

நாமக்கல் மாவட்டத்தில், 2-ஆம் ஆண்டு மாபெரும் ”புத்தகத் திருவிழா” 26.01.2024 முதல் 02.02.2024 வரை 8 நாட்கள் நாமக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு) நடைபெறுகிறது. இப்புத்தக திருவிழாவானது 80-க்கும் மேற்பட்ட அரங்குகள், 16 ஆளுமைகளின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள், உணவுத் திருவிழா, கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம், பல்வேறு அரசு துறைகளின் பணி விளக்க அரங்குகள், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

நாமக்கல் மாவட்டம் 2-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழா நேற்று (26.01.2024) தொடங்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2-ஆம் நாள் புத்தக திருவிழாவில் இன்று (27.01.2024) பள்ளி, கல்லூரி மாணாக்கர்களின் கலைநிகழ்ச்சிகள், தமிழன் கலைக் குழு நன்செய் இடையார் கலை குழுவினரின் கால் கோல் ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள் ”புத்தகம் என்ன செய்யும் ?” என்ற தலைப்பிலும், எருமப்பட்டி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் திரு.செல்வ செந்தில் குமார் அவர்கள் ”சிந்திக்கப் பழகு” என்ற தலைப்பிலும் சொற்பொழிவு ஆற்றினார்கள். 

முன்னதாக மாபெரும் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டிருக்கும் புத்தக அரங்குகள், அறிவியல் கோளரங்கம் மற்றும் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி, பல்வேறு அரசுத்துறைகளின் பணிவிளக்க கண்காட்சியினை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். 

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திரு.எம்.சிவக்குமார், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் திருமதி சே.சுகந்தி, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குநர் திருமதி க.ரா.மல்லிகா, முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ப.மகேஸ்வரி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வார் பாதுகாப்பு அலுவலர் திரு.த.முத்துராமலிங்கம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.வெ.முருகன், திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் (கூ.பொ) திரு.இரா.சேகர் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்