Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்டம்”2-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழா” 4-ஆம் நாள் நிகழ்ச்சியில் திரைப்பட பாடலாசிரியர் நெல்லை.ஜெயந்தா அவர்கள் ”வாசிப்பில் இருக்கிறது வாழ்க்கை” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.

நாமக்கல் மாவட்டம்”2-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழா” 
4-ஆம் நாள் நிகழ்ச்சியில் திரைப்பட பாடலாசிரியர் நெல்லை.ஜெயந்தா அவர்கள் ”வாசிப்பில் இருக்கிறது வாழ்க்கை” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.

நாமக்கல் மாவட்டத்தில், 2-ஆம் ஆண்டு மாபெரும் ”புத்தகத் திருவிழா” 26.01.2024 முதல் 02.02.2024 வரை 8 நாட்கள் நாமக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு) நடைபெறுகிறது. இப்புத்தக திருவிழாவானது 80-க்கும் மேற்பட்ட அரங்குகள், 16 ஆளுமைகளின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், உணவுத்திருவிழா, கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம், பல்வேறு அரசு துறைகளின் பணி விளக்க அரங்குகள், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

நாமக்கல் மாவட்டம் 2-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத்திருவிழா (26.01.2024) அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 4-ஆம் நாள் புத்தக திருவிழாவில் இன்று (29.01.2024) பள்ளி, கல்லூரி மாணாக்கர்களின் கலை நிகழ்ச்சிகள், நாமக்கல் மாவட்ட இயல், இசை கிராமிய கலைஞர்கள் சங்கத்தினரின் கிராமிய கலை நிகழ்ச்சி, ஸ்ரீ நடராஜ நர்த்தன நாட்டியலயா பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், திரைப்பட பாடலாசிரியர் நெல்லை.ஜெயந்தா அவர்கள் ”வாசிப்பில் இருக்கிறது வாழ்க்கை” என்ற தலைப்பிலும், மன வளக் கலை மன்ற மண்டல தலைவர் பேராசிரியர் உழவன் தங்கவேல் அவர்கள் மனிதனும் தெய்வமாகலாம் என்ற தலைப்பிலும் சொற்பொழிவு ஆற்றினார்கள். 

முன்னதாக மாபெரும் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டிருக்கும் புத்தக அரங்குகள், அறிவியல் கோளரங்கம் மற்றும் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி, பல்வேறு அரசுத்துறைகளின் பணிவிளக்க கண்காட்சியினை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். 

இந்நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் திரு.க.ராஜாங்கம், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.ச.பிரபாகரன், உதவி ஆணையர் (தொழிலாளர்) அமலாக்கம் திரு.எல்.திருநந்தன் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்