5-ஆம் நாள் நிகழ்ச்சியில் கலைமாமணி தமிழ்ச்செம்மல் பேராசிரியர்
முனைவர் அரசு பரமேசுவரன் அவர்கள் தலைமையில் மெல்ல திறக்கிறது புத்தகம்...
புன்னகை பூக்கவா? பூமியைப் புரட்டவா? என்ற தலைப்பில்
சிந்தனை பட்டிமன்றம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில், 2-ஆம் ஆண்டு மாபெரும் ”புத்தகத் திருவிழா” 26.01.2024 முதல் 02.02.2024 வரை 8 நாட்கள் நாமக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு) நடைபெறுகிறது. இப்புத்தக திருவிழாவானது 80-க்கும் மேற்பட்ட அரங்குகள், 16 ஆளுமைகளின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், உணவுத்திருவிழா, கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம், பல்வேறு அரசு துறைகளின் பணி விளக்க அரங்குகள், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்டம் 2-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத்திருவிழா (26.01.2024) அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 5-ஆம் நாள் புத்தக திருவிழாவில் இன்று (30.01.2024) நாமக்கல் மாவட்ட இயல் இசை கிராமிய கலைஞர்கள் சங்கம், ஸ்ரீ நடராஜ நர்த்தன நாட்டியலயா பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், கலைமாமணி தமிழ்ச்செம்மல் பேராசிரியர் முனைவர் அரசு பரமேசுவரன் அவர்கள் தலைமையில் மெல்ல திறக்கிறது புத்தகம்... புன்னகை பூக்கவா? பூமியைப் புரட்டவா? என்ற தலைப்பில் சிந்தனை பட்டிமன்றம் நடைபெற்றது. பேராசிரியர் மூ.ஜெயலட்சுமி மற்றும் பேராசிரியர் ஐ.செல்வம் ஆகியோர் புன்னகை பூக்கவே என்ற தலைப்பிலும், பேராசிரியர் செ.மகிழ்மதி மற்றும் திருமதி செ.மோகனப்பிரியா ஆகியோர் பூமியைப் புரட்டவே என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். கிரீன் பார்க் பள்ளி இயக்குனர் திரு.எஸ்.குருவாயூரப்பன் அவர்கள் நற்றமிழ் வளர்த்த நாமக்கல் நாயகர்கள் என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.
முன்னதாக மாபெரும் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டிருக்கும் புத்தக அரங்குகள், அறிவியல் கோளரங்கம் மற்றும் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி, பல்வேறு அரசுத்துறைகளின் பணிவிளக்க கண்காட்சியினை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆர்.தனராசு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திருமதி.ஏ.கனகேஸ்வரி, திரு.வி.ராஜு, நாமக்கல் நகராட்சி ஆணையாளர் திரு.சென்னு கிருஷ்ணன் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்