மேனாள் அரசு தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள்
இலக்கியத்தில் கோழிகள் என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் சாலை, நாமக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு) இன்று (31.01.2024) நடைபெற்ற 6-ஆம் நாள் புத்தக திருவிழாவில், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்
மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில், 2-ஆம் ஆண்டு மாபெரும் ”புத்தகத் திருவிழா” 26.01.2024 முதல் 02.02.2024 வரை 8 நாட்கள் நாமக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு) நடைபெறுகிறது. இப்புத்தக திருவிழாவானது 80-க்கும் மேற்பட்ட அரங்குகள், 16 ஆளுமைகளின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், உணவுத்திருவிழா, கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம், பல்வேறு அரசு துறைகளின் பணி விளக்க அரங்குகள், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்டம் 2-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத்திருவிழா (26.01.2024) அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 6-ஆம் நாள் புத்தக திருவிழாவில் இன்று (31.01.2024) நாமக்கல் மாவட்ட இயல் இசை கிராமிய கலைஞர்கள் சங்கம், ஸ்ரீ நடராஜ நர்த்தன நாட்டியலயா பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், மேனாள் அரசு தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் இலக்கியத்தில் கோழிகள் என்ற தலைப்பிலும், நாமக்கல் தமிழ்ச்சங்க செயலர் முனைவர் கோபால நாராயணமூர்த்தி அவர்கள் சிறகை விரி சிகரம் தொடு என்ற தலைப்பிலும் சொற்பொழிவு ஆற்றினார்.
முன்னதாக மாபெரும் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டிருக்கும் புத்தக அரங்குகள், அறிவியல் கோளரங்கம் மற்றும் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி, பல்வேறு அரசுத்துறைகளின் பணிவிளக்க கண்காட்சியினை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். மேலும், பள்ளி மாணவ, மாணவியர்கள் புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திரு.எம்.சிவக்குமார் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்