நாமக்கல் மாவட்டம் ”2-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழா”
7-ஆம் நாள் நிகழ்ச்சியில் எழுத்தாளர் சமஸ் அவர்கள் ”புத்தகங்களின் உலகம்”
என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.
நாமக்கல் மாவட்டத்தில், 2-ஆம் ஆண்டு மாபெரும் ”புத்தகத்திருவிழா” 26.01.2024 முதல் 02.02.2024 வரை 8 நாட்கள் நாமக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு) நடைபெறுகிறது. இப்புத்தக திருவிழாவானது
80-க்கும் மேற்பட்ட அரங்குகள், 16 ஆளுமைகளின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், உணவுத்திருவிழா, கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம், பல்வேறு அரசுதுறைகளின் பணிவிளக்க அரங்குகள், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்டம் 2-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத்திருவிழா (26.01.2024) அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 7-ஆம் நாள் புத்தக திருவிழாவில் இன்று (01.02.2024) நாமக்கல் மாவட்ட ஜவகர் மன்றம் மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், எழுத்தாளர் சமஸ் அவர்கள் ”புத்தகங்களின் உலகம்” என்ற தலைப்பிலும், நாமக்கல் தமிழ்ச்சங்கம் தலைவர் மருத்துவர் இரா.குழந்தைவேல் அவர்கள் ”கதை மாறிய கதை” என்ற தலைப்பிலும் சொற்பொழிவு ஆற்றினார்.
முன்னதாக மாபெரும் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டிருக்கும் புத்தக அரங்குகள், அறிவியல் கோளரங்கம் மற்றும் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி, பல்வேறு அரசுத்துறைகளின் பணிவிளக்க கண்காட்சியினை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். மேலும், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றார்கள்.
இந்நிகழ்வில் முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி ப.மகேஸ்வரி, திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க இணைப்பதிவாளர் திருமதி ஏ.விஜயசக்தி, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலர் திரு.எ.சுரேந்தின் அரசுத்துறை அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்