நாமக்கல் மாவட்டம் 2-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழாவினை தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் சாலை, நாமக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு) பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் இன்று (26.01.2024) 2-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழாவினை நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இராஜேஸ் கண்ணன், இ.கா.ப., அவர்கள், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் 2-ஆம் ஆண்டு மாபெரும் ”புத்தகத் திருவிழா” இன்று 26.01.2024 முதல் 02.02.2024 வரை 8 நாட்கள் நாமக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு) நடைபெறுகிறது. இப்புத்தக திருவிழாவானது 80-க்கும் மேற்பட்ட அரங்குகள்,
16 ஆளுமைகளின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள், உணவுத் திருவிழா, கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம், பல்வேறு அரசு துறைகளின் பணி விளக்க அரங்குகள், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
26.02.2024 இன்று முதல் 02.02.2024 வரை தினசரி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை போட்டி, பாட்டு போட்டி, கவிதை போட்டி, படம் பார்த்து கதை சொல், வினாடி வினா, மாறுவேடப் போட்டி, பேச்சுப் போட்டி, நாடகம் உள்ளிட்ட போட்டிகளும், கலை நிகழ்ச்சிகள், 16 ஆளுமைகளின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. மேலும் இந்த புத்தகத் திருவிழாவில் மருத்துவ முகாம், பல்வேறு அரசுத்துறை சார்ந்த அரங்குகள், உணவு அரங்குகள் ஆகியவை இடம் பெறவுள்ளன.
தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.
முன்னதாக, சொல்வல்லார் கவிஞர் நந்தலாலா அவர்கள் ”கலை + இலக்கியம் = வாழ்க்கை” என்ற தலைப்பிலும், மேனாள் நாமக்கல் மாவட்ட நீதிபதி திரு.கு.கருணாநிதி அவர்கள் ”அன்பின் வழியது உயர்நிலை” என்ற தலைப்பிலும் சொற்பொழிவு ஆற்றினார்கள். மேலும், நாமக்கல் மாவட்ட நாதஸ்வர தவில் இசை கலைஞர்கள் சங்கம் சார்பில் மங்கள இசை நிகழ்ச்சியும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர் மன்ற தலைவர் திரு.து.கலாநிதி, துணைத்தலைவர் திரு.சே.பூபதி, மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திரு.எம்.சிவக்குமார், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மகளிர் திட்ட இயக்குநர் திரு.கு.செல்வராசு, இணைபதிவாளர், கூட்டுறவு சங்கங்கள் திரு.க.பா.அருளரசு நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.மா.க.சரவணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.ச.பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வார் பாதுகாப்பு அலுவலர் திரு.த.முத்துராமலிங்கம், முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ப.மகேஸ்வரி, மாவட்ட நூலக அலுவலர் (பொ) திருமதி ச.தேன்மொழி, பபாசி தலைவர் திரு.சேது சொக்கலிங்கம் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்