Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை 2024-25-னை வெளியிட்டார்

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை 2024-25-னை வெளியிட்டார்


நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (05.01.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற வங்கியாளர்களுக்கான மாவட்ட அளவிலான ஆய்வுக் குழுக் கூட்டத்தில், நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை 2024-25னை வெளியிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயத்தில் நீண்டகால கடன் அளிப்பதற்கான சாத்தியக் கூறுகளை இத்திட்டம் விளக்குகிறது. அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்திற்கு 2024-25 ஆம் ஆண்டுக்கு, பயிர் கடன் ரூ.10,631.17 கோடி, விவசாய முதலீட்டு கடன் ரூ.2717.47 கோடி, விவசாய கட்டமைப்பு கடன் ரூ.70.62 கோடி, விவசாய இதர கடன்கள் ரூ.1037.18 கோடி என விவசாயத்திற்கான மொத்த கடன் மதிப்பீடு ரூ.14,456.45 கோடி மற்றும் சிறு, குறு நடுத்தர தொழில் கடன் ரூ.8,034 கோடி, ஏற்றுமதி, கல்வி மற்றும் வீட்டு வசதிக்கான கடன் ரூ.182.40 கோடி, அடிப்படை கட்டுமான வசதி ரூ 62.25 கோடி, சுய உதவிக்குழு மற்றும் கூட்டு பொறுப்பு குழுக்கான கடன் அளவு ரூ.785.70 கோடி என மொத்தம் ரூ.23,549.20 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளதென மதிப்பீடு செய்து கடன் திட்ட அறிக்கையினை வெளியிடப்பட்டுள்ளது. 

இது போன்ற கடன் வசதிகள், விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும் என்றார். வேளாண்மையில் இயந்திரமயமாக்கல், சொட்டு மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன் படுத்துதல்,  கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிடும். மேலும், வங்கிகள் இதுபோன்ற முதலீடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். 
இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட வளர்ச்சி மேலாளர் திரு.ரமேஷ், முன்னோடி வங்கி மேலாளர் திரு.முருகன், மண்டல மேலாளர் திரு.கேஸ்ரீனிவாஸ்,  திரு.விஜய விக்னேஷ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்