Hot Posts

6/recent/ticker-posts

அயலகத் தமிழர் தினம் 2024 விழா நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக பார்வையிட்டார்

அயலகத் தமிழர் தினம் 2024 விழா  
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் 
காணொலிக்காட்சி வாயிலாக பார்வையிட்டார்.
----
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இன்று (12.01.2024) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில், அயலகத் தமிழர் தினம் 2024 விழா  நடைபெற்றது.  அயலகத் தமிழர் தினம் ஜனவரி 12-ஆம் நாள் தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில், தமிழ்நாடு, இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் மற்றும் தமிழ் நிறுவனங்களில் புகழ்பெற்ற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த ஆண்டு ”தமிழ் வெல்லும்” என்ற கருப்பொருளை மையமாக் கொண்டு அயலகத் தமிழர் தினம் 2024 விழாவை தொடங்கி வைத்துள்ளார்கள். இந்நிகழ்ச்சி 11.01.2024 மற்றும் 12.01.2024 ஆகிய இரண்டு நாட்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பல்வேறு இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டது. 
அதனைத்தொடர்ந்து இன்றைய தினம், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள், நாமக்கல் கோஸ்டல் ரெசிடென்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு மற்றும் உணர்திறன் பயிற்சி பட்டறையில் அரசுத்துறை அலுவலர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக பார்வையிட்டார்.
இந்நிகழ்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.த.மாதவன், தனித்துறை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.ச.பிரபாகரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் (பொ) திருமதி எஸ்.சசிகலா, துறைசார்ந்த அலுவலர்கள் உட்பட தொலைக்காட்சி, நாளிதழ்களை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் கலந்து கொண்டார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்