Hot Posts

6/recent/ticker-posts

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.55.80 இலட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.

29.01.2024

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.55.80 இலட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. 


*****
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (29.01.2024) பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்களது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா. இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், 39 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.36.46 இலட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்.


பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் பேசியதாவது.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். அதனடிப்படையில் இன்றைய தினம் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.36.46 இலட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மோகனூர் பகுதியில் தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் சீரிய முயற்சியினால் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2.00 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கும் தனித்தனி அறைகள், சமையல் அறை, பொதுவான அறை, குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 2 மாதத்திற்குள் புதியதாக வீடுகட்டி தரப்பட்டுள்ளது. 


மேலும் இன்றைய தினம் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு வீட்டுமனை பட்டா, 1 மாற்றுத்திறனாளிக்கு வீடு கட்ட மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.1.00 இலட்சம் ஆணை, மற்றொரு மாற்றுத்திறனாளிக்கு மாதந்திர உதவித்தொகை ரூ.2,000/- லிருந்து ரூ.3000/- ஆக உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மீது அக்கறை கொண்டு இத்தகைய திட்டங்களை செயல்படுத்தி வரும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஆண்டுதோறும் ரூ.5.00 கோடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியாக அரசால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் ஸ்கேன் கருவிகள் வழங்கிட ரூ.1.00 கோடி வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் நிவாரண நிதிலிருந்து 45 நபர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, இருதய அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


இன்றைய தினம் எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 39 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.36.46 இலட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் தங்களுக்கு வழங்கப்படும் ஸ்கூட்டர்களை பிறருக்கு பயன்பாட்டிற்கு வழங்க கூடாது. நீங்கள் ஸ்கூட்டர்களை பயன்படுத்தி கொண்டு பயன்பெற வேண்டும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார்.


நாமக்கல் மாவட்டத்தில் சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ள சிற்றூர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மோகனூர் வட்டம், ஆரியூர், அ.மேட்டுப்பட்டி மற்றும் குமாரபாளையம் வட்டம், தட்டாங்குட்டை ஆகிய மூன்று கிராமங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், தலா ரூ.10.00 இலட்சம் வீதம் ரூ.30.00 இலட்சம் நிதி ஆணைகளை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர் மன்ற தலைவர் திரு.து.கலாநிதி, துணை தலைவர் திரு.சே.பூபதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.வெ.முருகன் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்