75-வது குடியரசு தின விழாவில் சிறந்த காவல் நிலையத்திற்கான
முதலமைச்சர் விருது-2024 பெற்ற நாமக்கல் நகர காவல் நிலையத்திற்கு
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (29.01.2024) பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா. இ.ஆ.ப., அவர்கள், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ராஜேஸ் கண்ணன் இ.கா.ப. அவர்கள் ஆகியோர் முன்னிலையில், 75-வது குடியரசு தின விழாவில் மாநில அளவில்
2 - வது சிறந்த காவல் நிலையமாக நாமக்கல் நகர காவல் நிலையத்திற்கு முதலமைச்சர் விருது -2024 வழங்கப்பட்டதையடுத்து நாமக்கல் நகர காவல் ஆய்வாளர் திரு.சங்கரபாண்டியன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் பேசியதாவது.
சென்னையில் நடைபெற்ற 75-வது குடியரசு தின விழாவையொட்டி,
2023-ம் ஆண்டிற்கான ஆய்வில் தமிழ்நாட்டில் உள்ள 1,541 காவல் நிலையங்களில் சிறந்த காவல் நிலையமாக மாநில அளவில் நாமக்கல் நகர காவல் நிலையம் இரண்டாம் பரிசு பெற்றுள்ளது. இதனையடுத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் குடியரசு தின விழாவில் நாமக்கல் நகர காவல் நிலையத்திற்கு முதலமைச்சர் விருது வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவில் 2-ஆம் பரிசு பெற்றமைக்கு எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாமக்கல் நகர காவல் நிலையம் 15- தாய் கிராமம். 55 - குக்கிராமங்கள், 31 நகராட்சி வார்டுகள் என 101 பகுதிகளை உள்ளடக்கியதாகும். பூலோக அளவில் மிகப்பெரிய பரப்பளவில், அதிக மக்கள் தொகையுடன் 1 காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 65 காவல் அலுவலர்களுடன் செயல்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை காட்டிலும் நாமக்கல் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர் செய்வதில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜேஸ் கண்ணன், இ.கா.ப. அவர்கள் உள்ளிட்ட காவல் துறை உயர் அலுவலர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள 1,541 காவல் நிலையங்களில் 2-ஆம் பரிசு பெற்று நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்ந்துள்ள நாமக்கல் நகர ஆய்வாளர் திரு, சங்கரபாண்டியன் அவர்களுக்கும், நாமக்கல் சரக துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும், காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநார்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என் இராஜேஸ்குமார் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜூ, திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திரு.எம்.சிவக்குமார், இணைபதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் திரு.க.பா.அருளரசு, நாமக்கல் துணை கண்காணிப்பாளர் திரு.தனராசு, காவல்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்