Hot Posts

6/recent/ticker-posts

காவிரி ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற மக்கள் கோரிக்கை

காவிரி ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற மக்கள் கோரிக்கை



பள்ளிபாளையம் ஜனவரி 3

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில், தற்போது அதிகளவு ஆகாயத்தாமரைச் செடிகள் படர்ந்துள்ளது.மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படும் போதெல்லாம், அதிகளவு ஆகாயத்தாமரை செடிகள் ஆற்று நீரில் அடித்து வரப்படுகிறது... அப்படி வரும் ஆகாயத்தாமரை செடிகள் பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் பரவலாக படர்ந்து விடுகிறது.. இந்த செடிகள் தோளில் பட்டால், தோல் அலர்ஜி, தோல் எரிச்சல் ,தோல் நோய் உள்ளிட்ட தோல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.. மேலும் அக்ரகாரம் காவிரி கரையோரம் பொதுமக்கள் துணி துவைக்க,குளிக்க, காவிரி ஆற்றை நீரை பயன்படுத்தும் பகுதியில், அதிகளவு ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்துள்ளதால் ,அவற்றை போர்க்கால அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்தினர், அகற்றி தர வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்