Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

*****

    நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, வெங்கரை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.01.2024) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 


வெங்கரை ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். பின்னர், சமையல் கூடத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தயார் செய்யப்பட்டிருந்த மதிய உணவினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.  மேலும், வெங்கரை ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு விளையாட்டுடன் கூடிய கல்வி கற்கும் வகையிலான விளையாட்டு பொருட்கள் தேவையான அளவு இருப்பதையும், குழந்தைகள் அந்த விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி விளையாடுவதையும் பார்வையிட்டு, குழந்தைகளுடன் கலந்துரையாடினார். 

    தொடர்ந்து, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், ஓடப்பள்ளி அக்ரஹாரம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், கட்டப்பட்டுள்ள படித்துறையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  


மேலும், திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர், மாணவ, மாணவியர்களின் வருகை பதிவேட்டை பார்வையிட்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் கலந்துரையாடினார். 


திருச்செங்கோடு இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள், மருந்துகளின் இருப்பு, நோயாளிகளுக்கான படுக்கை வசதி உள்ளிட்டவை குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருச்செங்கோடு, நல்லிபாளையம் பகுதியில் காந்தி ஆசிரமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். 


     இந்த ஆய்வுகளில் முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ப.மகேஸ்வரி, துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்