Hot Posts

6/recent/ticker-posts

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் 

சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு, இந்த ஆண்டு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரை தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்படுகிறது. சாலையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் விபத்தில்லாப் பயணத்தை உறுதி செய்வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவின் முக்கிய நோக்கமாகும். 


அதனடிப்படையில், நாமக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு) இன்று (22.01.2024) பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார்  அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.இராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியானது, நாமக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு) தொடங்கி, மோகனூர் சாலை அண்ணா சிலை, பரமத்தி சாலை உழவர் சந்தை வழியாக சென்று பூங்கா சாலையில் நிறைவடைந்தது.  இந்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள், வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பாதைகளை ஏந்தி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.


மேலும், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார்  அவர்கள், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட மஞ்சப்பைகளை  மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார்.



  முன்னதாக, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழியான ”தமிழ்நாட்டில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் சேதங்களை குறைத்து சாலை பாதுகாப்பை மேம்படுத்தி விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கிட உறுதிமொழியினை ஏற்கின்றேன். தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டமாட்டேன். செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டமாட்டேன். குடிபோதையில் வாகனம் ஓட்டமாட்டேன். அதிவேகமாக வாகனம் ஓட்டமாட்டேன். சீட்பெல்ட் அணியாமல் வாகனத்தை ஓட்டமாட்டேன். இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணம் செய்ய மாட்டேன். சிக்னல் விளக்கு மற்றும் சாலை குறியீடுகளை மதித்து நடப்பேன். போக்குவரத்துக் காவலரின் கை சைகைகளை மதித்து நடப்பேன். பேருந்தில் படியில் நின்று பயணம் செய்ய மாட்டேன். ஓடும் பேருந்தில் ஏறவோ இறங்கவோ மாட்டேன். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க மாட்டேன். குறுகிய பாலம் மற்றும் சாலை வளைவுகளில் வாகனத்தை முந்த மாட்டேன். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழி கொடுப்பேன்.மருத்துவமனை, பள்ளி மற்றும் கல்லூரி அருகில் ஒலி எழுப்ப மாட்டேன். நான் சாலை விபத்திற்கு காரணமாக இருக்கமாட்டேன். நான் சாலை விதிகளை பின்பற்றுவேன், விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவேன்”. என்ற உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் திரு.து.கலாநிதி திரு.செ.பூபதி,
காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு.ராஜீ, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திரு.இ.எஸ்.முருகேசன் (வடக்கு),  திரு.ஏ.கே.முருகன் (தெற்கு), நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர்கள் திரு.திருகுணா,  உதவிப் பொறியாளர் திரு.அசோக்குமார், முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ப.மகேஸ்வரி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்