------
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்தில் 27.10.2023 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 27.10.2023 முதல் 09.12.2023 வரை புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் செய்வது தொடர்பாக சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்றது. இந்த வாக்காளர் பட்டியல் திருத்த காலத்தில் (04.11.2023) (சனிக்கிழமை), 05.11.2023 (ஞாயிற்றுகிழமை), 25.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 26.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நான்கு நாட்கள் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் 27.10.2023 முதல் 09.12.2023 வரை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் – 2024-ன் கீழ் பெறப்பட்ட சேர்க்கை விண்ணப்பங்கள் (படிவம்-6), நீக்கல் விண்ணப்பங்கள் (படிவம்-7) மற்றும் திருத்தம் / இடமாற்றம் (படிவம்-8) ஆகிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் தொடர்பாக இன்று (21.01.2024) வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / வேளாண்மை-உழவர் நலத்துறை அரசு சிறப்பு செயலாளர் முனைவர் பொ.சங்கர், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.மா.க.சரவணன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் திருமதி சே.சுகந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.த.மாதவன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்